ஏழாந் திருமொழி

(2645)

இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,

மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்

தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்

மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

விளக்க உரை

(2646)

மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்

வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்

மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்

பிணிக்காம் பெருமருந்து பின்.

விளக்க உரை

(2647)

பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,

வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று

திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,

பருச்செவியு மீர்ந்த பரன்.

விளக்க உரை

(2648)

பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,

உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்

றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்

கைதான் தொழாவே கலந்து.

விளக்க உரை

(2649)

கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே

மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்

தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,

சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.

விளக்க உரை

(2650)

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,

மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட

வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!

அறிகண்டாய் சொன்னேன் அது.

விளக்க உரை

(2651)

அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்*

அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து

மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! *

கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.

விளக்க உரை

(2652)

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,

புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல

நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,

அடியேன துள்ளத் தகம்.

விளக்க உரை

(2653)

அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,

முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்

சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,

ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?

விளக்க உரை

(2654)

அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,

சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்

மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே

யாதாகில் யாதே இனி

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain