(850)

காட்டிநான்டிசய்வல்வினைப் பயன்றனில்மனந்தனை*

நாட்டிவைத்துநல்லவல்ல செய்யவெண்ணினாரென*

கேட்டதன்றியென்னதாவி பின்னைகேள்வநின்னொடும்*

பூட்டிவைத்தவென்னை நின்னுள்நீக்கல்பூவை வண்ணனே.

 

பதவுரை

பூவை வண்ணனே

-

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!

பின்னைகேள்வ!

-

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே

(யமகிங்கர ரானவர்கள்)

 

 

நான் செய் வல்வினை காட்டி

-

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி

பயன் தனில்

-

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்

மனம் தனை

-

எனது மநஸ்ஸை

நாட்டி வைத்து

-

துணியும்படி செய்வித்த

நல்ல அல்ல

-

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை

செய்ய எண்ணினார்

-

செய்ய நினைத்திருக்கிறார்கள்

என கேட்டது அன்றி

-

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக

உன்னது ஆவி

-

என்னுடைய ஆத்மாவை

நின்னொடும் பூட்டிவைத்த என்னை

-

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்; நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும் அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள் என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி ‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்; அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்; இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால் *** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்; ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார்.

செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும். என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை; இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல் “பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம். பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது - பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்; அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்; இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை. யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி கல்லவல்ல என்று பொதுவிலே அருளிச்செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.

 

English Translation

O Lord of Kaya blossom-hue and spouse of Lady Nappinnai! By grace of showing me self, you made my heart to come to you. The things I heard the Lord of Death will do to damage me are wrong, for you do hold me in your heart, I pray you do not leave me now.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain