(843)

விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்

கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாயவேலைநீர்

படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு

அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே.

 

பதவுரை

வேலை நீர்

-

ஜலதத்துவமாகிய கடலை

படைத்து

-

(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்

அடைத்து

-

(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;

அதில் கிடந்து

-

(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்

முன்

-

முன்னொருகாலத்திலே

கநைடபுது

-

(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)

ஏழ்விடை குலங்கள்

-

நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்

அடர்ந்து

-

கொழுப்படக்கி

வென்றிவேல் மண்மாதரர்

-

ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய

கடி கலந்த

-

பரிமளம் மிக்க திருத்தோளோடே

புணர்ந்த

-

ஸம்ச்லேஷித்த

காலி ஆய

-

கோபாலகிருஷ்ணனே!

நின் தனக்கு

-

உன் பக்கலிலே

அடைக்கலம் புகுந்த என்னை

-

சரணம் புகுந்த என்னை நோக்கி

அஞ்சல் என்ன வேண்டும்

-

“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும் அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும் அடியேனைநோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார். “முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு. அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.

 

English Translation

O Cowherd-Lord, you fought the bulls in contest for the Pinnai-dame, you came along with victory and took the lady in your brace. O Lord you made and churned the ocean, slept on it and made a bridge! I seek refuge in you alone, assure me safety, say “No fear”.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain