ஒன்பதாந் திருமொழி

(2362)

நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்

நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்

பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,

ஓராது நிற்ப துணர்வு.

விளக்க உரை

(2363)

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து

புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்

கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,

எங்கணைந்து காண்டும் இனி.

விளக்க உரை

(2364)

இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,

இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்

கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,

உள்ளத்தி னுள்ளே யுளன்.

விளக்க உரை

(2365)

உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்

துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய

வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,

கண்டா ருகப்பர் கவி.

விளக்க உரை

(2366)

கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,

செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்

போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்

ஏற்றுயிரை அட்டான் எழில்.

விளக்க உரை

(2367)

எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்

தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட

நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,

கார்வானம் காட்டும் கலந்து.

விளக்க உரை

(2368)

கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி

மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்

கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,

அந்திவான் காட்டும் அது.

விளக்க உரை

(2369)

அதுநன் றிதுதீதென் றையப் படாதே,

மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற

பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.

விளக்க உரை

(2370)

முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்

படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த

வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்

தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.

விளக்க உரை

(2371)

சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா

றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்

எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,

வண்டுழாய் மாலளந்த மண்.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain