(740)

ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா

தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியஅப் புலம்பல் தன்னை

கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த

சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே.

 

பதவுரை

ஏர் ஆர்ந்த

-

அழகு நிறைந்த

கரு

-

கரு நிறமுடைய

நெடுமால்

-

மஹா விஷ்ணு

இராமன் ஆய்

-

ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து

வனம் புக்க

-

காட்டுக்குச் சென்றதான

அதனுக்கு

-

அச்செயலை

ஆற்றா

-

பொறுக்கமாட்டாமல்

தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய

-

வெற்றிமாலை பொருந்திய பெரியமாலை போன்ற தோள்களையுடைய தசரத சக்ரவர்த்தி கதறின

அப்புலம்பல் தன்னை

-

அக்கதறல்களை,

கூர் ஆர்ந்த

-

கூர்மை மிக்க

வேல் வலவன்

-

வேற்படையின் தொழிலில் வல்லவரும

கோழியர் கோன்

-

உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்

குடை

-

கொற்றக்குடையை உடையவருமான

குலசேகரன்

-

குலசேகராழ்வார்

சொல் செய்த

-

அருளிச் செய்த

சீர் ஆர்ந்த

-

சிறப்பு மிக்க

தமிழ் மாலை இவை

-

தமிழ்ப் பிரபந்தரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்

வல்லார்

-

கற்கவல்லவர்கள்

தீ நெறிக்கண்

-

கொடியவழி யொன்றிலும்

செல்லார்

-

சென்று சேரமாட்டார்கள்.

(தான், தாம்

-

அசைகள்)

பத்தாந்திருமொழி

-

அங்கணெடுமதிள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராம சரித்திரத்தை ஸ்ரீ வால்மீகிபகவான் பேசியநுபவித்தாற்போலத் தாமும் பேசி அநுபவிக்கிறார் - இத்திருமொழியில். இத்திருமொழி ஸ்ரீராமாயண ஸங்க்ரஹ மெனப்படும்.

 

English Translation

This decad of sweet Tamil songs by Kulasekara, spear-wielding parasoled King of Uraiyur,    expresses the anguish of King Dasaratha, lamenting over the unbearable loss of his dear son, the dark Lord Rama, sent into exile. Those who master it shall never tread the pain of evil.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain