(739)

தேன்நகுமா மலர்க்கூந்தல் கெளசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ

கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று

கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்

வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.

 

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே

-

மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!

தேன் நகு மா மலர் கூந்தல்

-

தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய

கௌசலையும்

-

கௌஸல்யையும்

சுமித்திரையும்

-

ஸுமித்ரையும்

சிந்தை நோவ

-

மனம் வருந்த

கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல்கேட்ட கொடியவள்தன்சொல் கொண்டு

-

வக்ரமான வடிவம் போலவே மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு

கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த

-

காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட

வளம் நகரை

-

(உன்பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை

நானும் துறந்து

-

நானும் விட்டிட்டு

வானகமே மிக விரும்பி போகின்றேன்

-

மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின், நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச்  செல்லுகின்றே னென்கிறான். கூனுருவின் = இன் - ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையேயன்றி வளைவுமாதலை கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க. தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.

 

English Translation

O King of all mankind! Listening to the words of the cruel Kaikeyi, ill-advised by the notorious hunchback maid, you gladly went into the forest leaving the flower-coiffured Kousalya and Sumitra in grief. Today, I too leave this city you renounced, and gladly enter my abode in heaven.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain