(738)

முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்

உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது

என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்

நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.

 

பதவுரை

முன் ஒருநாள்

-

முன்பு ஒரு நாளிலே

மழு ஆளி சிலை வாங்கி

-

பரசுராமனிடத்திலிருந்து அவன் கைவில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் பெற்றாய்

-

அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!

உன்னையும் உன் அருமையையும்

-

உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்

உன் மோயின் வருத்தமும்

-

உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்

ஒன்று ஆக கொள்ளாது

-

ஒரு பொருளாகக் கொள்ளாமல்

என்னையும்

-

என்னையும்

என் மெய் உரையும்

-

எனது ஸத்யவாக்கையும்

மெய் ஆக கொண்டு

-

பொருளாகக் கருதி

வனம் புக்க எந்தாய்

-

காடேறச் சென்ற எமது ஐயனே!

நெடுந்தோள் வேந்தே

-

பெரிய தோள்களையுடைய அரசனே!

ஏழ் பிறப்பும்

-

இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்

நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்

-

நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறுபெறக்கடவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மழு ஆளி - மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி. அன்றியே, மழு வாளி - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி. மழு வாள் - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு - கோடாலி

என் ஐயனே! உன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் தன்மையை மெய்யாக அறியாமல் என்னை வெறுந்தந்தை யென்றே நினைத்து அப்பிதாவின் வாக்கியத்தைப் பரிபாலனம் பண்ணவேண்டுமென்றும், நெடுநாளாக ஸத்யமே சொல்லிவருகிற தந்தையை நாம் தோன்றி அஸத்யவாதியாக ஆக்கவொண்ணாதென்று என் ஸத்யத்தை ஸத்யமாக்க வேணுமென்றும் நெஞ்சிலே கொண்டு வனத்திற்புகுந்த என் அருமைமகனே! என்பது மூன்றாமடியின் கருத்து. தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய் - செறு-பகுதி

 

English Translation

O My Master! Earlier one day; you took the bow from the axe-wielder and relieved him of his powers. Without any considerations for yourself, or for your grieving mother Kousalya, you have taken me and my promises for real, and gone into the forest. My Liege! Through seven lives, shall prefer you alone for a son.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain