(735)

அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்

என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி

கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது

எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே.

 

பதவுரை

அம்மா என்று உகந்து அழைக்கும்

-

ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற

ஆர்வம் சொல் கேளாதே

-

ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்

அணி சேர் மார்வம்

-

ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு

என் மார்வத்திடை அழுந்த

-

என் மார்பிலே அழுந்தும்படி

தழுவாதே

-

(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்

முழுசாதே

-

(அந்த ஆலிங்கந போகக்கடலில்) முழுகாமலும்

உச்சிமோவாது

-

உச்சியை மோந்திடாமலும்

கைம்மாவின் நடை அன்ன மெல்நடையும்

-

யானையினது நடைபோன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்

கமலம் போல் முகமும் காணாது

-

தாமரை மலர்போன்ற (அவனது) முகப்பொலிவையும் காணமாலும்

எம்மானை என் மகனை இழந்திட்ட

-

எமது ஐயனான என்மகனைக் (காடேறப்போக்கி) இழந்து விட்ட

இழி தகையேன்

-

இழிவான செயலைச் செய்தவனான நான்

இருக்கின்றேனே

-

(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரீதிப்ரகர்ஷம் தோன்ற ஐயா! என்று அழைக்கும் மகனது இன்சொல்லைக் கேட்கப் பெறாமலும் இயற்கையழகோடு செயற்கையழகு செய்யும் ஆபரணங்கள் அசைந்து விளங்குகின்ற அவனது மார்பைத் தழுவிக் கொள்ளப் பெறாமலும், ஆநந்தஸாகரத்தில் அழுந்தப் பெறாமலும் உச்சிமோரப் பெறாமலும் நடையழகு காணப்பெறாமலும் முகாரவிந்தத்தை அநுபவிக்கப் பெறாமலும் என் கண்மணியைக் காட்டுக்குத் துரத்தின படுபாவியாகிய நான் அப்போதே  சாவாமல் இன்னும் பிழைத்திருக்கவும் வேணுமா என்று பரிதபிக்கிறபடி. அம்மாவென்று = தந்தையை அம்மாவென்று அழைத்தல், உவப்புப் பற்றிய பால் வழுவமைதி: “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால்தினை இழுக்கினுமியல்பே.” என்பது நன்னூல்.

 

English Translation

No more will I here you call me, “Father” lovingly, no more will I brace your jeweled chest to my bosom tightly, no more smell your scalp and sink into ecstasy, no more see your graceful elephant-gait and lotus-like face! Having lost you, my Son, my Master, I wonder how I am still living. Alas, I must be the lowliest among men.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain