(731)

வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி

மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி

நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக

எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ எம்பெருமான் எஞ்செய் கேனே

 

பதவுரை

எம் இராமாவோ!

வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு

-

கொடிய வாயையுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு

இரு நிலத்தை வேண்டாதே

-

பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு

விரைந்து

-

சீக்கிரமாக

வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து

-

வெற்றியை விளைப்பதன் மைம்மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு

வனமே மேவி

-

காட்டையே சேர்ந்து

நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்

-

நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களையுமுடையளான பிராட்டியும்

இளங்கோவும்

-

இளைய பெருமாளும்

பின்பு போக

-

உடன் தொடர்ந்து வர

எ ஆறு நடந்தனை

-

எங்ஙனம் நடந்து சென்றாயோ!

எம் பெருமான்

-

எமது ஐயனே!

என் செய்கேன்

-

நான் என் செய்வேன்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எவ்வாறு நடந்தனை = கால்நடை நடக்க உரியனல்லாத நீ எங்ஙனம் நடந்து சென்றாயோ என்று பரிதபிக்கிறபடி கைகேயி வார்த்தைகளுக்குக் குறுக்குச் சொல்ல முடியாமல் இவ்வாறு உன்னைப் பிரியவிட்டு அகதிகனான எனக்கு இனி மரணமே கதியென்பான் என் செய்கேன் என்றான் எம்பெருமான் அண்மை விளியாதலின் இயல்பு.

 

English Translation

Heeding the foul words of your foul mother, you instantly set out, without any desire for this land. You sent back the caparisoned elephant and the horse-driven chariot and went into the forest barefooted with the sharp-eyed jeweled Sita and the younger brother Lakshmana following. O My Rama! How did you walk? O My Lord! What can I do?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain