(730)

வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்

நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு

என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு

நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே

 

பதவுரை

எம் இராமாவோ

-

ஓ எமது இராமனே!

வளம் நகரம்

-

அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்

வல் தாளின் இணைவணங்கி தொழுது ஏத்த

-

(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க

மன்னன் ஆவான் நின்றாயை

-

அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்

அரி அணை மேல் இருந்தாயை

-

சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை

நெடுங்கானம் படர போகு என்றாள்

-

பெரியகாட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்

நல் மகனே

-

நல்ல குமாரனே!

நான்

-

நான்

உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு

-

உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக்கேட்டு

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்

-

நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது - கல்லைக்கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீதலக்ஷணை. இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை; உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான். புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க. ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும். போகு - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று, போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது. இராமாவோ - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.

 

English Translation

I had thought I would offer worship; seat you on lion throne and crown you king of the city today. Alas your mother Kaikeyi made you roam the forest instead! O My Rama! Assenting to her wishes, well did I bequeath my kingdom to you, my good son!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain