(718)

மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து

எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்

கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோல மாம்குல சேகரன் சொன்ன

நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுலகே

 

பதவுரை

மல்லைமா நகர்க்கு

-

செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வடமதுரைக்கு

இறையவன் தன்னை

-

தலைவனாயிருந்த கம்ஸனை

வான் செலுத்தி

-

வீரஸ்வர்க்கத்திற்கு அனுப்பி

ஈங்கு வந்து அணை

-

(தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த

பிள்ளை

-

கண்ணாபிரானுடைய

மாயத்து எல்லை இல் செய்வன

-

அற்புதத்தில் எல்லையில்லாத சேஷடிதங்களை

காணா

-

(நடந்தபோது) காணப்பெறாத

தெய்வத் தேவகி

-

தெய்வத்தன்மை பொருந்திய தேவகியானவள்

புலம்பிய புலம்பல்

-

புலம்பிக்கொண்டு சொன்ன பாசுரங்களை

கொல்லி காவலன்

-

கொல்லி நகர்க்கு அரசராய்

மால் அடி முடி மேல் கோலம் ஆம்

-

ஸர்வேச்வரனுடைய திருவடி களைத் தம் திருமுடிக்கு அலங்காரமாகவுடையரான

குலசேகரன்

-

குலசேகராழ்வார்

சொன்ன

-

அருளிச்செய்த

நல் இசை தமிழ் மாலை

-

நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை

வல்லார்கள்

-

ஓதவல்லவர்கள்

ஒல்லை

-

விரைவாக

நாரணன் உலகு

-

ஸ்ரீவைகுண்டத்தை

நண்ணுவார்

-

சேரப்பெறுவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை பெற்ற பேற்றைக்கருதி, அவள் அவ்விராம பிரானைத் தொட்ழலிலிட்டுத் தாலாட்டுக் கூறின முகத்தால் இத்திருமொழி அருளிச்செய்கிறார். இவ்வநுபவம் இவர்க்குத் திருக்கண்ணபுரத்தெம்பெருமான் விஷயத்திலே செல்லுகிறது.

 

English Translation

This decad of sweet Tamil songs by Kulasekaran, king of kolli who bears the Lord’s feet on his crown, sings of the lament of the godly dame Devaki on not seeing the acts of the infinite wonder-child Krishna who killed the tyrant king Kamsa. Those who master it shall quickly reach Narayana’s world.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain