(716)

குன்றி னால்குடை கவித்ததும் கோலக் குரவை கோத்த தும்குட மாட்டும்

கன்றி னால்விள வெறிந்ததும் காலால் காளி யன்தலை மிதித்தது முதலா

வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர

ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் காணு மாறினி யுண்டெனி லருளே

 

பதவுரை

குன்றினால் குடை கவித்ததும்

-

கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்

கோலம் குரவை கோத்ததும்

-

அழகாக ராஸக்ரீடை செய்ததும்

குடம் ஆட்டும்

-

குடக் கூத்தாடினதும்

கன்றினால் விள எறிந்ததும்

-

கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்

காலால்காளியன் தலை மிதித்ததும் முதலா

-

திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள

வென்றி சேர்

-

வெற்றி பொருந்திய

நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும்

-

விலக்ஷணமான பால்ய சேஷ்டி தங்க ளெல்லா வற்றினுள்ளும்

ஒன்றும்

 

ஒரு சேஷ்டிதத்தையும்

என் உள்ளம் உள் குளிர

-

என் நெஞ்சு குளிரும்படி

அடியேன்

-

நான்

அங்கு கண்டிட பெற்றிலேன்

-

அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக்

கண்டு களிக்க பெற்றிலேன்;-

இனி

-

இப்போது

காணும் ஆறு

-

(அவற்றை நான்) காணத்தக்க உபாயம்

உண்டு எனில்

-

இருக்குமாகில்

அருள்

-

கிருபை செய்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உனது சேஷ்டைகளை யசோதைக்குக் காட்டினையேயன்றிப் பாவியேன் கண்ணுக்கு நீ ஒன்றையுங் காட்டவில்லை; கீழ் நடந்தவற்றையெல்லாம் எனக்காக மறுபடியும் ஒருதடவை செய்து காட்டக்கூடுமோ என் அப்பனே! என்கிறாள்.

 

English Translation

Holding up a hill for an umbrella, dancing the Kuravai with dames, dancing on pots turned upside down, known, knocking down the wood-apples by throwing a calf against the tree, dancing on Kaliya’s hood, - I have not seen any of these and the other victorious child plays of yours. If there is any way that I, this lowly self, can see them now, please tell and satisfy me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain