(715)

முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்

எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்

அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்

தொழுகை யுமிவை கண்ட அசோதை தொல்லை யின்பத் திறுதிகண் டாளே

 

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து

-

வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையைவிட்டு (அளைந்து)

தொட்டு உண்ணும்

-

எடுத்து உண்கிற

இள முகிழ் தாமரை சிறுகையும்

-

இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக்கைகளும்

எழில் கொள்தாம்பு கொண்டு அடிப்பதற்கு

-

அழகிய தாம்பாலெ அடிக்க (அதற்கு)

எள்கு நிலையும்

-

அஞ்சிநிற்கும் நிலையும்

வெண்தயிர்தோய்ந்த செம்வாயும்

-

வெளுத்த தயிர்பூசிய சிவந்த வாயும்,

அழுகையும்

-

அழுவதும்,

அஞ்சி நோக்கும் அ நோக்கும்

-

பயந்து பார்க்கிற அப்பார்வையும்

அணிகொள் செம்சிறு வாய் நெளிப்பதுவும்

-

அழகிய சிவந்த சிறியவாய் துடிப்பதும்

தொழுகையும்

-

அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற

இவை

-

இவற்றையெல்லாம்

கண்ட

-

நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த

அசோதை

-

யசோதையானவள்

தொல்லை இன்பத்து

-

பரமானந்தத்தினுடைய

இறுதி

-

எல்லையை

கண்டாள்

-

காணப்பெற்றாள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தாரார்தடந்தோள்க ளுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி” திலே புகவிட்டு அளைவனாதலால் “ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடல்நீர், நாழிமுகவாது நானாழி” என்கிற ஸாமாந்யமான செய்தியையும் அறியாதே அவிவேகந் தோற்றச் செய்த காரியங்களைக் காணப் பெற்றிலேன், என்கிறாள் முதலடியில். “அடிப்பதற்கு” - அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்; தொகுத்தல்.

கண்ணன் தயிரைக் களவாடி உண்ணும்போது யசோதை கண்டு தடியும் தாம்புமெடுத்தவாறே “தாயெடுத்த சிறு கோலுக் குளைந்தோடித், தயிருண்டவாய் துடைத்த மைந்தன்” என்றபடி அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்து வாய்நிறையச் சுற்றிலும் பூசிக்கொள்வன்; பிறகு யசோதையால் அடிபட்டு அழுவன், அஞ்சினாற்போல் நோக்குவன், வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுவன், கடைசியாக அஞ்ஜலி பண்ணுவன்; ஆக இக்கோலங்களையெல்லாம் கண்டு ஆநந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான பாக்கியம் சோதைக்குக் கிடைத்ததேயன்றிச் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள். (தொல்லையின்பத்திறுதி கண்டாளே.) “****” என்ற உபநிஷத்தின்படி - தொல்லையின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லிற்றாய், அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள! என்றும் உரைப்பதுமொன்று. அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர்- ஓரளவு பட்டவர்.

 

English Translation

Eating up all the butter with your wee lotus-like tender hands, then seeing the coir rope being shown for beating, you cringed in fear, your red lips and little mouth, - smeared with white curd, twisted. The look of terror in your eyes, your crying face, your pleading hands. -all this the good Yasoda alone sees, to the limit of her limitless joy.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain