(713)

தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்

மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ

வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்

உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே

 

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே

-

குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே

கண்ணா தவழ்ந்து எழுந்து

-

கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து

தளர்ந்தது ஓர் நடையால்

-

தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்

செம்மண் பொடியில்

-

சிவந்த புழதி மண்ணிலே

ஆடி வந்து

-

விளையாடி (அக்கோலத்தோடே) வந்து

என் தன் மார்வில்

-

என்னுடைய மார்விலே

மன்னிட பெற்றிலேன் அந்தோ

-

நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!

வண்ணம் செம்

-

அழகுபெற்றுச்சிவந்து

சிறு

-

சிறிதான

கைவிரல் அனைத்தும்

-

கைவிரல்களெல்லாவற்றாலும்

வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப்பெற்றிலேன்

-

வாரிக்கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய சேஷத்தை (நான்) உண்ணப்பெறவில்லை;

கொடுவினை யேன்

-

(இவற்றையெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;

ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது

-

ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குளிர்ந்து அழகிய தாமரைப்பூப்போலே அலர்ந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானே! நீ செம்மண்ணிலே புழுதியளைந்து விளையாடும்போது தவழ்ந்து செல்வதனாலும் தட்டுத்தடுமாறித் தரையில் காலூன்றியு மூன்றாதும் நடப்பதனாலும் புழுதி மண்ணை அளைந்த அக்கோலத்தோடே வந்து என் மார்விலே கட்டிக் கொண்டு கிடக்கப்பெற்றிலேனே!; எல்லாத் திருவிரல்களாலும் ப்ரஸாதத்தை வாரி அமுது செய்யும் பொது வாயது கையதாக மிகுந்த ப்ராஸதத்ரையு முண்ணப் பெற்றினலேனே!; ஆட்டின் கழுத்தில் முலை (அதர்) போலே என்னை என் தாய் வீணாகவேயன்றோ பெற்றாளென்கிறாள்.         “ செம்மண் பொடியில் தவழ்ந்து  ஆடி, எழுந்து தளர்ந்ததோர்  நடையால் வந்து என்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன்” என்று அந்வயித்துப்பொருள் கொள்ளுதல் சாலச்சிறக்கும் இப்பாட்டின் முன்னடிகட்கு “ மக்கண் மெய்தீண்டலுடற்கின்பம் “ என்னுங் குறளையும் பின்னடிகட்கு “அமிழ்தினு மாற்ற வினிதே தம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்”  என்னுங் குறளையும் நினைக்க.

 

English Translation

O Krishna, with eyes like the petals of a lotus! Alas, I have not enjoyed seeing you play in the mud, then come crawling and toddling to embrace my bosom with red dust all over you, nor of eating the remains of sweet-rice savored by you with all your pink fingers. O the terrible sinner that I am, for what did my mother beget me?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain