(712)

மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்

தருத லும்உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்

திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே

 

பதவுரை

நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர

-

உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி

மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும்

-

அழகிய வாயிலுண்டான முத்தத்தை கொடுப்ப தென்ன உன்னுடைய தகப்பானரைப் போன்ற

வடிவு

-

(உன்) வடிவழகை

கண்டுகொண்டு

-

(நான்) பார்த்து

உள்ளம் டீள் குளிர

-

(கடலில் நீரை முகந்துகொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய

செம் சிறு வாயிடை

-

சிவந்த சிறிய திருவாயிலே

விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்

-

விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே சொல்லுகிற மழலைச் சொற்க ளென்ன (ஆகிய இவற்றிலே)

ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன் தெய்வ நங்கை எசோதை

-

ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.  ‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி

எல்லாம் பெற்றாளே

-

அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப்பெற்றாளே!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருநெற்றிலே கூடப்பிறந்தாற்போல அமைந்து விளங்கும் சுட்டியானது அசையும்படி நீ முத்தங்கொடுப்பதையும் இழந்தேன்; நம் குழந்தையின் முகம் தகப்பனாரின் முகம் போலவே இருக்கிறது! “ என்று சொல்லிக் கொண்டு உனது முகத்தைச் சந்தோஷமாக பார்த்து நிற்கும் போது நீ விரல்களை வாயினுள்ளே வைத்துக்கொண்டு பால்யோசிதமாக சீற்றம் தோற்றச்சொல்லும் மழலைச் சொற்களையும் நான் கேட்கப்பெறாமல் இழந்தேன். இழப்பதற்கு நானொருத்தி ஏற்பட்டாற்போலே அநுபவிப்பதற்கு யசோதைப் பிராட்டி யென்பாளொருத்தி ஏற்பட்டாள், உன் லீலா ரஸங்களெல்லாவற்றையும் அவளே பெற்றனள் என்கிறாள். “ முத்தம் தருதலும், உரைக்கு மவ்வுரையும் ஒன்றும் பெற்றிலேன் “ என்று அந்வயம் வெகுளியாய் நின்று -சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம். யசோதை ஒருவித நோன்பும் நோற்காதே யாத்ருச்சிகமாகவே கண்ணபிரானுடைய அதிமாநுஷஸீலவ்ருத்த வேஷங்களைனைத்தயுங்காணப்பெற்றமை பற்றித் தெய்வநங்கை எனப்பட்டாள்.

 

English Translation

O Hapless me! I have not enjoyed seeing your beautiful forehead-jewel sway over your face, nor of placing a kiss on your beautiful lips, nor of seeing the image of your father in your face with a flutter in my heart, nor of seeing you put your finger into your little red mouth and babble in a fit of rage. The godly dame Yasoda has received it all!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain