(711)

களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும்திண் டோளும்

தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த

இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த

அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே

 

பதவுரை

கண்ணனே களிநிலா

-

ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவையுடைய

எழில் மதி புரை முகமும் திண் கை

-

பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணித்தான திருக்கைகளும்

முதலாயிரம்

-

பெருமாள் திருமொழி

மார்வும்

-

திருமார்பும்

திண் தோளும்

-

வலிமைபொருந்திய திருத்தோள்களும்

தளிர் மலர் கரு குழல்

-

தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக்குழற்கற்றையும்

பிறை அதுவும் தடங்கொள்

-

அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான

தாமரை கண்களும்

-

தாமரை போன்ற திருக்கண்களும் (ஆகிய இவை)

பொலிந்த இளமை இன்பத்தை

-

அழகுபெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை

இன்று

-

இப்போது

என்தன்கண்ணால்

-

என்னுடைய கண்ணாலே

பருகுவேற்கு

-

நான் அநுபவியாநின்றாலும்

இவள்தாய் என நினைந்த

-

(இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான

பிள்ளைமை

-

சைசவப்பருவத்திலுண்டான

அளவு இல் இன்பத்தை

-

அளவில்லாத ஆநந்தத்தை

இழந்த

-

அநுபவிக்கப்பெறாமல் இழந்த

பாவியேன் எனது

-

பாவியான என்னுடைய

ஆவி நில்லாது

-

உயிரானது தரித்து நிற்க வழியில்லையே!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானே! செறிந்த நிலாவையுடைய பூர்ண சந்திரன் போன்ற திருமுகமும் திண்ணிதான திருக்கையும் திருமார்வும் திருத்தோளும் திருக்குழலும் திருநெற்றியும் திருக்கண்களுமாகிய இவ்வயவங்களின் போபைகளால் விளாங்கா நின்றுள்ள உனது யௌவந பருவத்திலழகை இப்போது நான் கண்ணாரக் கண்டநுபவியா நின்றேனாகிலும், தாயாரொருத்தியையேயன்றி வேறொருத்தரையு மறியாத இளம் பருவத்தை அநுபவிக்க பெறாமற்போனேனே! என்கிற அநுதாபமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டிருப்பதனால் புண்படுத்தா நின்ற தென்கிறாள்.

 

English Translation

O Krishna! I can only see and enjoy your infancy through my mind your moon-like radiant face, your well formed hands, arms and chest, your flowers-and-sprig-bedecked-dark-hair, your crescent-marked forehead and your large lotus-eyes. Alas, within the span of thinking that I was your mother, I lost the joy of begetting you. O My karma! I fear I shall not live.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain