நான்முகன் திருவந்தாதி திருமொழி – 7

(2442)

மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,

தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்

இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,

சென்றொன்றி நின்ற திரு.

விளக்க உரை

(2443)

திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,

கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த

மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,

தார்தன்னைச் சூடித் தரித்து.

விளக்க உரை

(2444)

தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,

விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி

வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,

பூசித்தும் போக்கினேன் போது.

விளக்க உரை

(2445)

போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்

காதானை யாதிப் பெருமானை,- நாதானை

நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்

சொல்லானை, சொல்லுவதே சூது.

விளக்க உரை

(2446)

சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை

மாதாய மாலவனை மாதவனை – யாதானும்

வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்

தில்லையோ சொல்லீ ரிடம்.

விளக்க உரை

(2447)

இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு

படநா கணைநெடிய மாற்கு,- திடமாக

வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்

வையேனாட் செய்யேன் வலம்.

விளக்க உரை

(2448)

வலமாக மாட்டாமை தானாக, வைகல்

குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை

நம்பதியை ஞானப் பெருமானை,

சீரணனை யேத்தும் திறம்.

விளக்க உரை

(2449)

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்

மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்

சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்

தூதுவரைக் கூவிச் செவிக்கு.

விளக்க உரை

(2450)

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,

புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு

நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்

மறைப்பொருளும் அத்தனையே தான்.

விளக்க உரை

(2451)

தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,

ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் – யானொருவன்

இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்

சென்றாங் கடிப்படுத்த சேய்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top