முதல் திருவந்தாதி திருமொழி – 6

(2132)

எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்

தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்

பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்

இருந்தான் திருநாமம் எண்.

விளக்க உரை

(2133)

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,

வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி

ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்

திருமாலைக் கைதொழுவர் சென்று.

விளக்க உரை

(2134)

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்

புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு.

விளக்க உரை

(2135)

அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்

குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி

விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்

டட்டெடுத்த செங்கண் அவன்.

விளக்க உரை

(2136)

அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்

அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால்

ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்

பேராயற் காட்பட்டார் பேர்.

விளக்க உரை

(2137)

பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,

ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே

கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்

அடிக்கமலந் தன்னை அயன்.

விளக்க உரை

(2138)

அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,

உயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற

நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,

சொன்மாலை கற்றேன் தொழுது.

விளக்க உரை

(2139)

தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,

எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,

அந்தரமொன் றில்லை அடை.

விளக்க உரை

(2140)

அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,

மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை

முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்

தன்விலங்கை வைத்தான் சரண்.

விளக்க உரை

(2141)

சரணா மறைபயந்த தாமரையா னோடு,

மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய

பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,

ஓராழி சூழ்ந்த வுலகு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top