(658)
தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே
பதவுரை
| தேட்டரும் |
– |
(தன் முயற்சியால்) தேடிப்பெறுதற்கு அருமையானவனும் |
| திறல் |
– |
(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும் |
| தேனினை |
– |
தேன் போல் பரமபோக்யனும் |
| தேன் அரங்கனை |
– |
தென் திருவரங்கத்தில் வாழ்பவனும் |
| திரு மாது வாழ்வாட்டம் இல் வனமாலை மார்பனை |
– |
பெரிய பிராட்டியார் நித்யவாஸம் செய்தற்கிடமாய் வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திருமார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை |
| மால்கொள் சிந்தையர் ஆய் |
– |
(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட |
|
மனதையுடையராய் |
||
| ஆட்டம் மேவி |
– |
(அந்த மோஹத்தாலே நின்றவிடத்தில் நிற்கமாட்டாமல்) |
|
ஆடுவதிலே ஒருப்பட்டு |
||
| அலந்து அழைத்து |
– |
(பகவந்நாமங்களை) வாய்விட்டுக் கதறி கூப்பிட்டு |
| அயர்வு எய்தும் |
– |
இளைப்படைகின்ற |
| மெய் அடியார்கள் தம் |
– |
உண்மையான அன்புடைய பாகவதர்களின் |
| ஈட்டம் |
– |
கோஷ்டியை |
| கண்டிட கூடும ஏல் |
– |
ஸேவிக்கப் பெறுவோ மாகில் |
| அது காணும் கண் பயன் ஆவது – |
– |
கண் படைத்ததற்குப் பயன் அதுவேயன்றோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பூணாமார்பனைப் புள்ளுரும் பொன்மலையைக் காணாதரா; கண்ணென்றுங் கண்ணல்ல கண்டோமே” என்று ‘எம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கு ப்ரயோஜநம்’ என்கிற ஸித்தாந்தம ஸாமாந்யமானதென்றும் ‘பாகவதர்களுடைய கோஷ்டியை ஸேவித்தாலன்றிக் கண்களுக்கு ஸாபல்யம் கிடையா’ தென்பதே விசேஷஸித்தாந்தமென்றும் ஸாரமாகக் கண்டறிந்தவர்களுள் இவ்வாழ்வார் தலைவர் என்னுமிடம் இப்பாட்டில் விளங்கும். அடியவர்கட்குப் பரமயோக்யனான சரிய:பதியை வாயாரத்துதித்து அவனிடத்திலே மிக்க மோஹங்கொண்டு அதனால் உடம்பு நின்றவிடத்தில் நில்லாது கூத்தாடி, ‘ச்ரிய:பதியே! -மந்நாராயணனே!’ என்றிப்படி பல திருநாமங்களைக்கூறி யழைத்து, அவ்வளவில் எம்பெருமான் கண்ணெதிரே வந்து ளேவைதந்தருளக் காணாமையாலே வருந்தி ஏங்குகின்ற பாரமார்த்திக பாகவதர்களின் கோஷ்டியை ஸேவிக்கப்பெறுவதே கண்களுக்கு ப்ரயோஜநமாமென்கிறார்.
மேவி = மேவுதல்-விரும்புதல்: “நம்பும் மேவும் நசையாகும்மே.” “கண்டிடக் கூடு மேல்” என்றது-இத்தகைய மெய்யடியார்களை இந்நிலவுலகத்தில் காணப்பெறுவதின் அருமையை விளக்கும்.
English Translation
The Lord is difficult to attain; he is the strength of the devotees, and sweet as honey; his chest, a fit place for the goddess Lakshmi, is adorned by an unfading flower garland. He is adored by devotees in his Arangam temple; they sing and dance, despair and call “Ranga” till they are fatigued. If mine eyes could only see those bands of true devotees, would they not have served their purpose?
