(2156)

(2156)

காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,

ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச்

சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை

வந்திப்பார் காண்பர் வழி.

 

பதவுரை

திருமாலே

லக்ஷ்மீநாதனே!

உன்னை

(பரமபுருஷனான) உன்னை

உன்ன

ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்

காப்பு

பிரதிபந்தகங்கள்

கழியும்

விட்டு நீங்கும்;

உன்னை உன்ன

உன்னை நினைக்கு மளவில்,

அருவினைகள் ஆப்பு

போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்

அவிழ்ந்து ஒழியும்

அவிழ்ந்துபோம்;

உன்னை சிந்திப்பார்க்கு

உன்னை த்யானிப்பவர்களுக்கு

மூப்பு இல்லை

கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;

நின் அடியை வந்திப் பார்

உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்

வழி

அர்ச்சிராதி மார்க்கத்தை

காண்பர்-

கண்டு அனுபவிக்கப்பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலே! ஸர்வரக்ஷகனானவுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப் பிரகிருதிஸம்பந்தமும் நீங்கி திவ்யலோகப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார். பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்மவச்யராகாரெபந்தை முன்னடிகளாலும், பரமசாம்யாபுத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச்செய்கிறார்.

முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் . அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம். அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன் அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர். *“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க. உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்மஸாக்ஷிகளும் ஆராயக்கடவரல்லர் என்றவாறு.

வழி காண்பர்- நரகத்தைபோலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம்வழியைக் காண்பரென்றவாறு

 

English Translation

The heads that worship your feet will always see the path. O       Lord Tirumal! those who seek your protection are rid of karmas. Those who seek you are freed of bondage, Those who think of you never grow old.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top